|
(காயல் பட்டணத்திலடங்கி விளங்கும் இமாம் ஷாம் ஷிஹாபுத்தீன் ஒலியுல்லாஹ் அவர்கள் மீது கட்டளைக் களித்துரையும் பாதத்தான் என்ற பதமும்)
திருப்பா தநெஞ்சருஞ் சீரான நேர்வழி சேர்ந்து மனீத்
திருப்பா கப்பூண்டிருப்பான் பல நு}ல்க ளியற்றிய நீர்
திருப்பா ததாசனிதமே மகிழ சிரம்புனைய
திருப்பா ததாள் தரா தேதோ திகழ்ஷாம் ஷிஹாபொலியே
பாதத்தால் தராததேதோ - இந்தப்
பையல் மீதென்ன வாதோ தீதோ
அநு சரணங்கள்
மாதவ ஞானப்ர சாதா – என்று
மாநிலம் போற்று மெய் வேதா – எனக்
காதா வாகு மெந் தாதா – சொந்த
அடியேன் முன்வர வொண்ணாதா (பாதா)
பாவத்தினா லுளம் வாடி – யானற்
பாக்கியம் பெற மிக நாடி - இனும்
ஆவலேதோடுற வாடி – சரண்
அடைந்தே னிதோ விரைந்தோடி (பாதா)
என்னை நீர் கைவிட வாமா – பல
இடாதெனைத் தொடலாமா – வீணில்
சின்னன் யானுங் கெடலாமா – கிர்பை
செய்வதலை கடலாமா
கன்னல் செறியுங்காஹிரூரா – மிகு
கர்த்தர் சுலைமான் குமாரா – ஆர்க்கும்
அண்ணல்ஸா மொலியென்னும் பேரா - இந்த
அப்துல்லாக்கருண்மகா மேரா (பாதா)
|
|
Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser.
Please click the button below to download & install it.
It's free, fast and simple to use.
You need real player software to play the media files.
Please click the image to download the free player
|
|