|
எங்கே நபியோ நானும் அங்கே நபியோடு (2)
உறவாட அருள் புரிவாயே அல்லாஹு யா அல்லாஹு (2) (எங்கே)
மா மதீனா நன்னபிகள் வாழும் நன்னகராம்
நானிலத்தில் சுவனம் என்னும் பொன் நகராம் (2)
மதீனா சென்று சிலக் காலம் - மன்னர் நபிகளின் சன்னிதானம்
மகிழ்வாய் நானும் வாழ்வதற்கு அருள்வாய் அல்லாஹு(2) (எங்கே)
மஹ்ஷரிலே மானிடர் எல்லாம் தவிக்கையிலே
மாநபிகள் லிவாவுல் ஹம்தின் நிழலினிலே (2)
காப்போன் உந்தன் அணைப்பினிலே - கருணை நபியின் அருகினிலே
அடியேன் பாவியும் ஒதுங்கிடவே அருள்வாய் அல்லாஹு (2) (எங்கே)
அடிமை நான் சுவனம் செல்ல அருள் புரிவாய்
அண்ணல் நபி அரங்கினில் எனக்கோர் பணி தருவாய் (2)
சீமான் உந்தன் அருளினிலே - சுந்தரர் நபிகளின் ஹித்மத்திலே
அழியாக் காலம் இருப்பதற்கு அருள்வாய் அல்லாஹு (2) (எங்கே)
|
|
Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser.
Please click the button below to download & install it.
It's free, fast and simple to use.
You need real player software to play the media files.
Please click the image to download the free player
|
|