|
தையலேயென் மையன் மீறுதே
தாஹா நபி மீதே –எடி
துய்யன் றிருத்து}தராய் வந்துதித்திடும்
வையம் புகழ் மெய்யரிந்தப்
பையற் கருள் செய்ய நிதந் (தையலே)
சரணங்கள்
காசினியி லமவாசி மதியழை
காத்தி முல்லன்பியா – எடி காசினி
தேச ராஜர் போற்றும் ஹாஷிம் குலத்தில் வந்த
காசிம் யாஸீன் தாஸீனெனும்
ராஜரைக்கண் காண விளந் (தையலே)
சந்த்ர வடிவினுஞ் சுந்த்ர முகமேனி
சாந்தங் கமழ் பூவாம் - எடி சந்த்ர
கந்த்ரங் குடையிடு மாந்தர்க் கிறையென் முன்
வந்து வந்து கந்தப்பாதஞ்
சொந்த மாய்த் தந்தாள விளந் (தையலே)
கன்னல் கமுகொடு செந்நெல் விளைமக்கா
மன்னரப்துல்லா – எடி கன்னல்
அண்ணலவர் மகவின்னும் வரக்காணேன்
பெண்ணே கண்ணே
மின்னே யிதற்
கென்ன செய்வே னப்துல்லாவென் (தையலே)
|
|
Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser.
Please click the button below to download & install it.
It's free, fast and simple to use.
You need real player software to play the media files.
Please click the image to download the free player
|
|