HomeLive BroadcastAudio VideoBooksGalleryLyrics
Members Login | Not yet a member? Sign Up Now! It's Free!
Arabic
Hamd
Qaseeda
Salaam
Mawlid
Urdu
Naat Shareef
Salam
Qawwali Shareef
Hamd & Munajaat
Qaseeda
Ghazal
Mankabats
English
English Praise Songs
Tamil
இறைத் துதி
நாயகம் துதி
உர்து - தமிழ் புகழ்பா
ஸஹாபாக்கள்
இறை நேசர்கள்
புனித நாள்கள்
Punjabi
Naat Shareef
ஹிழ்ர் மாலை

அல்லாஹ்வின் பேரருளாலும்  அண்ணல்நபி துஆப் பேறாலும்
எல்லா வளமும் சிறந்தோங்க ஏந்தல் பூமான் ஹிழ்ர் வருவீர்

அண்ணல் பெருமான் இல்லத்தார் அலியாh பாத்திமா ஹஸன் ஹுஸைனார்
எண்ணம் சிறக்கும் ஆல் அஸ்ஹாப் இனிதே மகிழ ஹிழ்ர் வருவீர்

மெய்நிலைக் கண்ட மாமேதை மேவும் எங்கள் குரநாதர்
பொய்ந்நிலை யோட்டும் முஹ்யித்தீன் பொருந்தும் புனித ஹிழ்ர் வருவீர்

கோமான் வழியின் இறைநேயர் கொள்கையோங்கும் வழித்தோன்றல்
சீமான் சீடர் நாட்டங்கள் சித்தி பெறவே ஹிழ்ர் வருவீர்

சாரும் நாகூர்ப் பதியில் வாழ் சற்குண ஷாஹூல் ஹமீதரசர்
சீரும் சிறப்பும் பெருகிடவே செழுமைச் செம்மல் ஹிழ்ர் வருவீர்

அகமலர் விரிய இறையவனன் அன்பில் தோயும்  நேயர்களை
முகமன் கூறி வரவேற்கும் முதிரும் அறிவார் ஹிழ்ர் வருவீர்

மூஸா நபிக்கும் அறிவூட்டி முற்றும் பொறுமை சோதித்த
ஏசாச் சிறப்பின் எழிலோங்கும் ஏந்தல் ஞானி ஹிழ்ர் வருவீர்

பல்கும் வளங்கள் செறிந்தோங்கும் பல்கு நாட்டின் பேரரசர்
நல்கும் இப்ராஹீமத்ஹம் நலனுறத் தூண்டும் ஹிழ்ர் வருவீர்

புலன்கள் ஐந்தும் கீழடக்கிப் புதுமை விளைக்கும் பேரொளியாய்
நிலத்தின் ஆட்சி துறந்தெழுந்த நீதர் நாதர் ஹிழ்ர் வருவீர்

ஊரோரெல்லாம் உயர் நெறியை உள்ளம் கொண்டு வரவேற்க
பாரோர் பகரும் அபுல் அப்பாஸ் பசுமையோங்கும் ஹிழ்ர் வருவீர்

இறையின் மொழி சேர் மருத்துவத்தால் இப்னு ஸம்மாக் உடற்பிணியைக்
குறையறத் தீர்த்த கோமானே குன்றின் விளக்கே ஹிழ்ர் வருவீர்

முத்தை யொத்த ஞானி நயீம் முகமன் கூறி வரவேற்க
பத்து மணிமொழி பதித்தபெரும் பரிசை அளித்த ஹிழ்ர் வருவீர்

அருளே மிகுந்த அப்துல்லாஹ் அவையோர்க்கஞ்சி கரந்துரைய
பொருளே மிகுந்த எழுதொடரைப் புகட்டி வைத்த ஹிழ்ர் வருவீர்

பிரியமிக்க பெருஞானி பிஷ்ருல் ஹாபி ஓதி வர
அரிய இறைஞ்சல் துஆவீந்து அன்போடணைந்த ஹிழ்ர் வருவீர்

முன்னே வந்த பெரியாரின் மூளும் பசியை போக்கிடவே
தன்னை விற்றுப் பணி செய்த தானம் உயர்ந்த ஹிழ்ர் வருவீர்

இறையோ னவனின் பெருநாமம் இஸ்முல் அஃழம் வெளிக்காட்டி
மறையா ஞானம் வழங்கி வரும் மறை பொருளான ஹிழ்ர் வருவீர்

இறைப்பைத் தவிர்க்கும் மாவுல் ஹயாத் இணையில் நீரை பருகியதால்
சிறப்பைப் பெற்ற சீரியரே சிர்ருகள் நிறைந்த ஹிழ்ர் வருவீர்

இருகடல் போன்ற இரு விழிகள் இடையே நின்று மகிழ்வூட்டும்
ஒரு கடல் போன்ற ஒளிமயமே உவப்பே மிகுந்த ஹிழ்ர் வருவீர்

எடுவான் படுவான் நடுவானில் எங்கே நின்று அழைத்தாலும்
கெடுவான் செய்யும் தீவினைக்குக் கேடயமாகும் ஹிழ்ர் வருவீர்

படியில் படித்தே அறியாத பாமரருக்கும் ஞானமதை
நொடியில் புகட்டி உயர்வளிக்கும் நோக்கே பூண்ட ஹிழ்ர் வருவீர்

விரும்பும் இடத்தில் வெளித்தோன்றும் விறலே படைத்த வித்தகரே
அரும்பும் அடியார் ஆசையினை அடையச் செய்யும் ஹிழ்ர் வருவீர்

பெரும்பயன் விளைக்கும் நும்மரிய பெயரோ டிணைந்த அவ்ராதை
இரு பயன் கண்டே ஓதிவர இசைவை வழங்க ஹிழ்ர் வருவீர்

புத்துயிரூட்டும் பேரொளியே புதுமை காட்டும் பெருநிதியே
சித்துகளாற்றும் சீரியரே சிறப்பே மிக்க ஹிழ்ர் வருவீர்

சலியாதுலகின் வாழ்வோங்கச் சாற்றும் கலையே சிறந்தோங்கக்
கலிமா அமுதச் சுவையூட்டும் காரணக் கடலே ஹிழ்ர் வருவீர்

அடியார்க்கருளும் ஆரணரே அடியேன் மகிழ வந்திடுவீர்
முடியா தாரின் கைப்பிடிக்க முன்னோன் தூதே ஹிழ்ர் வருவீர்

வன்முறை ஊழல் வளர்ந்தோங்கும் வையக மீதில் கற்றோரின்
புன்முறை ஒழுக்கத் தவறுகளை புரிந்து கேட்க ஹிழ்ர் வருவீர்

பணத்தைத் திரட்டும் குறிக்கோளில் பண்பைத் துறந்து வாழ்கின்ற
பிணத்தை யொத்தோர் பெருகுலகின் பேதமையகற்ற ஹிழ்ர் வருவீர்
ஆகா உணவை உட்கொண்டும் ஆகாச் செயலே மேற் கொண்டும்
ஆகாவென்றே வாழ்வோரின் ஆகம் திருத்த ஹிழ்ர் வருவீர்

வேதா எங்கள் பைசாசம் வெறி கொண்டாடும் தருணம் யாம்
பாதாளத்தில் வீழாமல் பரிந்தே காக்க ஹிழ்ர் வருவீர்

பாரா ரெம்மைப் பழிப்பதனைப் பாரீர் பகையைப் பாரீரோ
ஆரா வமுதம் ஈந்தெம்மை அணைத்துக் காக்க ஹிழ்ர் வருவீர்

குறையா தோங்கும் செல்வத்தை குறையாதளிக்கும் கோமானே
முறையா விளக்கே மாமணியே! மதியே! நிதியே! ஹிழ்ர் வருவீர்

பற்றைத் துறந்தே இறையவனைப் பற்றிப் பிடித்த நும் கரத்தைப்
பற்றிப் பிடிக்கும் அடியேனைப் பற்றிக் காக்க ஹிழ்ர் வருவீர்

உள்ளிற் பொங்கும் ஆர்வத்தை உரையிற் காட்டுந் திறமற்றேன்
அள்ளித் தருவீர் இறைஞானம் அகமே உவக்க ஹிழ்ர் வருவீர்

எம் பெயர் முழுதும் நும்மாட்சி என்றும் இலங்கி ஒளி பெறவே
நும் பெயர் விளங்கும் தானத்தே நுகர வந்தோம் ஹிழ்ர் வருவீர்

பாசிகள் அகற்றி நீராடப் பன்னீர்க் குளத்தை அடைத்துள்ளோம்
வாசியில் வாசம் தந்தருள்வீர் வள்ளல் குருவே ஹிழ்ர் வருவீர்

ஆசிகள் பெற்றெம் அகமலர ஆசை மிகவே வந்துள்ளோம்
நேசித்தெம்மை கைப்பிடித்து நேர்வழிக் காட்ட ஹிழ்ர் வருவீர்

இதயம் மலர்ந்து விழிப்புறவும் ஈமான் சிறந்து ஒளி பெறவும்
உதயக் கதிர் போல் சிறப்பாக உத்தமரான ஹிழ்ர் வருவீர்

முகமதில் இலங்கும் பேரொளியை முன்னே கண்டு பயனடைய
அகமது இபுனு மலக்கானே அணைத்து மகிழ ஹிழ்ர் வருவீர்

மாட்டும் சூரியன் அழுக்காறு வளரும் துயரம் வஞ்சனைகள்
வாட்டும் பிணிகள் விரைந்தோட வானோர் போற்றும் ஹிழ்ர் வருவீர்

இல்லான் இனியான் உவந்தேனே லிவஜ்ஹில்லாஹி என்றேனே
அல்லாஹ் அரிய முகத்துக்காய் அகிலம் போற்றும் ஹிழ்ர் வருவீர்

ஆர் பிழை பொறுக்கும் அல்லாஹ்வின் அடியேன் எனும் பெயர் பூண்டிடுமென்
சேர் பிழை பொறுத்தே இறையருள் செவ்வையாக ஹிழ்ர் வருவீர்


ஹிழ்ரு நபி (அலை) பைத்து

புகழும் துதியும் லில்லாஹி
புகழும் ஸலவாத்தவன் நபிக்கி
மிகவாய் நாங்கள் சொல்லுகிறோம்
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

ஆறில் நூறாய் நின்றதுவும்
அஞ்சில் பிஞ்சாய் ஆடியதும்
கூறிய கோலம் கொண்டதுவும்
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

சரியாய் சரியை கிரியை பதில்
சறுகாயோக ஞானமதில்
சரியாய் நிற்க உதவி தா
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

நாசூத் தென்று மலகூத்தில்
நல் ஜபறூத்து லாஹுத்தில்
நேச ஹாஹுத்து பாஹுத்தில்
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

ஜம்ஹுத்தென்னும் தம்ஹுத்தில்
ஜம்ஆய் நின்று ஜெயம் பாட
அம்பத்தொன்றில் அடங்கிய நல்
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

அறுநாங்கச்சா அறுகோண
அறுஷில் நின்று விளையாட
பறுதாய் பார்க்கும் இடமெல்லாம்
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

பச்சை பவழம் மாணிக்கமும்
உச்சியின் வாசலில் அற்புதமாய்
நிச்சயமாக அருள் புரிய
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

பச்சை புறாவும் தான் கூவ
பாலகன் வாயில் கவி மொழிய
முச்சந்தி வீதியில் முன்வந்த
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

மாணிக்க மரகத மேடைதனில்
மணிமுத்தன்மை நின்றாட
காணாது தவிந்தருள
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

விண்ணோர் புகழும் மணிவிளக்கே
வேந்தன் அருளே திருஒழிவே
கண்ணின் முன்னே வென் மலராய்
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

திரைகள் கூடிய அலை கடலில்
தாண்டிப் பிழைக்கும் எழியவர்க்கு
நிச்சயமாக அருள் புரிய
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

வாயில் வந்த வாக்கதற்கு
வல்லவன் தந்தான் நல்லருளை
நோய்கள் தீர்த்து கிருபை செய்ய
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

முகத்தின் மலராய் முகமலராய்
முபாரக்காகிய முன் நொழிவாய்
நெற்றியின் நேரே நீர் இறங்கி
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

மல்லிகை வாசம் மலர் வாசம்
மகிமை தங்கிய முக வாசம்
முல்லை வாசத்துடன் என் முன்னே
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

அள்ளிய கையில் மணவாசம்
அரிய திக்றை உரைப்பதற்கு
வெள்ளாணை மேல் பவனியுடன்
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

சங்கை மலராம் சதுகோல
மங்காதிருக்கும் மணவாசம்
உங்கள் பாதம் நிதம் பணிந்தேன்
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

தீனோர் கூடிய சபை தனிலே
தினமும் பாடி புகழுகிறேன்
வானவர் மாமணம் சூடுகின்ற
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

ஏற்றிப் பிடிக்க இசை தருவாய்
மாற்றிப் பிடிக்கும் வகையறிந்து
காற்றில் கருத்துடன் நின்றாடும்
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

வாசம் பொருந்திய மல்லிகையும்
வளமாய் ரோஜா புஷ்பத்துடன்
நேசம் வைத்து தகுதியுடன்
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

ஆதியின் அருளால் நின்றாடும்
அதிலே கூவும் குயில் மொழியாய்
வேதியர் உள்ளம் நின்றாடும்
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

வாடா மல்லிகை ரோஜாப்பூ
வளமாய் வாலை வடிவுடனே
நாடும் நாட்டம் நடுவீட்டில்
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

காற்றும் புயலும் கொந்தளிப்பும்
கூடிய கடலில் யான் போனால்
போற்றி உங்கள் நாமம் சொல்ல
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

அலைகள் கூடிய கடல் மீதில்
ஆபத்தொன்றும் அணுகாமல்
அடியார்க்குதவி தந்தருள
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

ஆதி அருள் பெற்றிருந்தவரே
ஆலம் பதினொன்றாயிரத்தில்
ஜோதியின் வடிவில் என் முன்னே
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

அங்கம் கமழ அருள் பொங்கி
எங்கும் மணக்க இருள் நீக்கி
தங்கும் அருளை தந்தென் முன்னே
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

வாயால் புகழும் வாலிபர்க்கும்
வருசை தருவீர் வயவருக்கும்
தங்கும் அருளை தந்தென் முன்னே
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

வெட்டி வேறும் மறி கொழுந்தும்
வீசும் மணம் போல் புகழுகின்றேன்
கட்டி அணைத்து கனிகள் தர
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

தீவினை நிறைந்த தீயோரை
தீயில் விட்ட மெழுகு போல்
தானாய் மடிய வரம் கொடுக்க
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

அட்டிகள் செய்யும் துஷ்டர்களை
அந்தப் புறமாய் தள்ளிவிட்டு
எட்டி தீனை பிடித்தவர் முன்
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

ஆதியின் அருளால் கருவாகி
அன்னையில் பிறந்த பாலகன் போல்
மோதிய பாவம் துலைத்திடவே
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

அங்கம் கமழ் அருள் புரிய
சென்னியி நடுவே நின்றாட
கண்ணிரு நடுவே காட்சி தர
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

ஆசை வைத்தேன் அலல் ஹக்கி
அப்துஹு அவன் முஹம்மது மேல்
நேசம் வைத்து என் முன்னே
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

செந்தாமரையாம் ரெட்சணமணி
செங்கமலத்தின் பச்சை மணி
வந்து என் முன் கண்மணி போல்
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

அந்தரமீதுள்ள சந்திரனை
அருகில் வைத்து விளையாட
சந்திர சூரிய வடிவுடனே
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

காச்சல் பீச்சல் கடுகளவும்
கல்குகள் மீது அணுகாமல்
காலை மாலை ஆதரிக்க
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

நாட்டம் வைத்தேன் நலம் அடைய
தேட்டம் வைத்தேன் யா ஹிழ்றே
வாட்டத்துடனே தேடுகிறேன்
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

முற்றியும் வெற்றியும் தந்தருள்வீர்
மோட்சப் பாதையும் அறிவித்து
வற்றா வாழ்க்கை தந்திடவே
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

வந்தீர் வருகை தந்திடவே
வழி பார்த்திருந்த எளியவன் முன்
தந்தீர் இஷ்கு குடிப்பதுவை
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

கனிகள் அமிர்தம் தந்திடவே
கண்முன் மலராய் நின்றிடவே
அனுதினம் ஹுஹு வலம் புரிய
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

நவமணி முத்தே நாயகமே
நாங்கள் தேடும் யாஹிழ்றே
தவங்கள் செய்ய உதவி தா
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

வேதா நீதா நாதாவே
வேதியர் புகழும் யாஹிழ்றே
தூய்தாய் நோய்கள் தூராக்க
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

கொஞ்சும் கிளி மொழி ரஞ்சிதமே
வஞ்சக றறியார் உமதருமை
பஞ்சம் நீக்கி பலங் கொடுக்க
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

திருவிளக்கேத்தி தெரு நடுவில்
திரைகள் நீக்கி பார்ப்பவர்க்கு
குருவே கண்ணில் காட்சி தர
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

மனங்கள் தேடி வாடுகிறேன்
மல்லிகை வனத்தின் மாமலரே
கண்முன் வந்து கனிகள் தர
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

பைத்துல்லாஹ்வை வலம் சுத்தி
பைத்துல் முகத்திசில் யான் தொழுது
துய்ய நூஸில் உறூஷதுவில்
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

பைத்துல் மஃமூர் பள்ளியில் நான்
ஜம்ஆய் ஹு உடன் வலம் சுற்ற
துய்ய லிகா தந்திடவே
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

குர்ரத்துல் அய்னியா பல்யான்
குந்து ஷெய்கியா பல்யான்
குற்றம் நீக்கி குணம் தரவே
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

மல்கான் மகனே பல்யாவே
நல்லவர் முன்னில் நிற்பவரே
கல்விகள் தந்து கண் திறக்க
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

முனாஜாத் தோதிய அப்துல்லாஹ்
மன்னவன் அருளை தேடுகிறேன்
அன்னை தந்தை மக்களுக்கும்
நூருல் அய்னே ஹிழ்ரு வருவீர்

Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser. Please click the button below to download & install it. It's free, fast and simple to use.


Google

You need real player software to play the media files. Please click the image to download the free player
© mediaislam.com