|
வாருங்கள் காஜா வாருங்களேன்
வந்துங்கள் அருளை தாருங்களேன்
வாழ்வில் அருளும் பொருளும் தந்து
வாழ்வினை வளம் பெற செய்யுங்களேன்.
அஜ்மீர் வாழும் பேரரசே
அள்ளி வழங்கிடும் வல்லரசே
அகமியமுள்ள இறை முரசே
அடிமைக்கருள்வீர் என் சிரசே
உங்கள் புகழை தினம் பாடி
உயர்வுற நாடிடுவோர் கோடி
உதவிடுவீர் ஒரு நொடி நாடி
உண்மையில் நீங்கள் என் உயிர் நாடி
கண்ணீர் கொண்டுங்கள் மலர் பாதம்
கழுவி குடித்துயர் மெஞ்ஞானம்
கண்டு துறந்திட பொய் நானம்
கனிவுட னருள்வீர் இறை ஞானம்
கண்ணிமைக் கொண்டுங்கள் வாசலை நான்
கண்ணியமாக கூப்பிடுவேன்
காஜா முயீனுத் தீன் அரசே
காட்டுங்க ளற்புதம் தீன் முரசே
வாசல் படி மீதில் விழுந்து
வறுமை நீங்கிட வேண்டிடுவேன்
வாடி வரும் உங்கள் அடிமையினை
வாழ்த்தி அனுப்பிடுவீர் வழியே
திருமுகம் ஒரு தரம் காட்டிடுவீர்
திரு நபி வழியினில் சேர்த்திடுவீர்
திருமறை ஞானம் தந்திடுவீர்
திருவருள் பெற்றிட வேண்டிடுவீர்
பாதணி தலை மேல் சுமந்திடுவேன்
பாவங்கள் போக்கிட கேட்டிடுவேன்
பாக்களை பூக்களாய் சொறிந்திடுவேன்
பாசத்தால் பனிபோல் கரைந்திடுவேன்
நபி குல வழி வந்த நாயகமே
நற்குணத்தின் திரு தாயகமே
நல் வழி காட்டிய தாரகையே
நபி மணி தந்த எம் நாயகமே
அஜ்மீர் நகருக்கு நான் வருவேன்
அல்லல்கள் போக்கிட கேட்டிடுவேன்
அள்ளி வழங்கிட நீர் மறுத்தால்
அண்ணலிடம் நான் முறையிடுவேன்
தாமதம் ஏனோ தருவதற்கு
தடைகளும் உண்டோ வருவதற்கு
தாண்டிடுவீர் தடை அருள்வதற்கு
தயவுடன் கேட்டோம் பெறுவதற்கு
நாட்டிலும் காட்டிலும் வாழுகின்ற
நல்லோர் தீயோர் நாடுகின்ற
நாட்டங்கள் தீர்த்து மூளுகின்ற
நாட்டின் போர் தீ அணைத்திடுவீர்
மூவின மக்களும் இந்நாட்டில்
முழு வளம் பெற்றுயர் திருநாட்டில்
முடிவற்ற இறைவனின் வழி பாட்டில்
மூழ்கிடச் செய்திடுவீர் வலியே!
பலதாய் தோற்றுவ தொன்றே தான்
பலதாய் காண்பது இணையே தான்
பலதில் ஒன்றை காண்பதற்கு
படி பல ஏற்றிடுவீர் காஜா
முழு மதி முகமது நபி முகமாம்
முச்சுடர் வீசிடும் முகமதுவாம்
முடிவற்ற இறைவனின் முகமதுவாம்
முடிவினில் இறைவன் முஹம்மதுவாம்
மூலப் பொருளின் கோலங்களை
முழு உலகாய் நாம் காண்பதுவே
மூலப் பொருளன்றி வேறில்லையே
முடிவில் அவனே நானில்லையே.
|
|
Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser.
Please click the button below to download & install it.
It's free, fast and simple to use.
You need real player software to play the media files.
Please click the image to download the free player
|
|