HomeLive BroadcastAudio VideoBooksGalleryLyrics
Members Login | Not yet a member? Sign Up Now! It's Free!
Arabic
Hamd
Qaseeda
Salaam
Mawlid
Urdu
Naat Shareef
Salam
Qawwali Shareef
Hamd & Munajaat
Qaseeda
Ghazal
Mankabats
English
English Praise Songs
Tamil
இறைத் துதி
நாயகம் துதி
உர்து - தமிழ் புகழ்பா
ஸஹாபாக்கள்
இறை நேசர்கள்
புனித நாள்கள்
Punjabi
Naat Shareef
பத்மினி ஜாதிப்பெண் மானே
Author: மர்ஹூம் பா.சு அப்துல்லாஹ் அப்பா

தைக்கா கந்து}ரி சிறப்பலங்காரம்

(தேசிக தோடி – ராகம் ரூபக – தாளம் )

1. பத்மினி ஜாதிப்பெண் மானே – பசுந்
  தேனே – பகர்வேனே – உன்றன்
  பாங்கினில் வீற்றிருப்பேனே – புகழ்
  பாடப்பல மதவின்னங்
  கூடத்தா மதமென்ன
  பாகுறுங்காஹிறின்மீது – தைக்கா
  சாஹிக் கந்து}ரியிப் போது            (பத்மினி)

2. காவல ராமுமர் பாலர் – குண
  சீலர் – அநுகூலர் -  நமைக்
  கைதாங்கும் ரட்சகமேலர் – உயர்
  ககனப் பதியோர் போற்றும்
  மிகுதம்புவியோ ரேத்தும்
  கண்டதெல்லா மவர்புதுமை – சொல
  வுண்டுமோ யாவர்க்கு முதுமை             (பத்மினி)

3. வேதகுர்ஆன் சுவி சேஷம் - விசு
  வாசம்   - உப தேசம் - ராத்தி
  போதுகின்றார் பவ நாசம் - இனு
  மேகக்கதிர் போலுரு
  வாகச்சுடரைத் தெரு
  வீதிபரந்தெங்கும் வீசும் - எந்தப்
  போதுங் கிந்தீல் பிரகாசம்             (பத்மினி)

4. மல்லிகை முல்லைப்பூந் தாது - மலர்ப்
  போது – ஜக மீது – தரும்
  வாசமெங்குங் கிடை யாது – அந்த
  வாடாமலிகைச் சூடியே
  சோடாப் பாலகர்  கூடியே
  மாட்டுந்தாயிறா வினோசை – செவி
  கேட்டு மென்மேலுமே யாசை            (பத்மினி)

5. மாடப்புறாவன்ன   மோடும் - மயி
  லாடும் - குயில்  பாடும் - துய்ய
  மாதவர் தம்மன நாடும் - சிறு
  வஞ்சிக்கொடியிடை யாளர்
  மிஞ்சப்புகழ் ஸலவாத்தை
  வானோர் மகளிருங் கண்டு - இங்கு
  தானமர்ந்தார் மகிழ் கொண்டு            (பத்மினி)

6. தீனோர் புகழ்ந்திம் வீடு – எதிர்
  கூடு – மணி மேடு - இல்லைத்
  தேசமெங்குமிதற் கீடு – அதில்
  சீனிபா லோடினிய
  தேனின் மாரி பொழிய
  தென்றல் பரவு முல்லாசம் - எங்கும்
  மண்டும் பரிமள வாசம்             (பத்மினி)

7. வானோருலவுங் கைலாசம் - பிர
  காசம் - பாவ னேசம் - அதை
  மானுமிதே விசு வாசம் - புவி
  மாந்தரத பாகக்கர
  மேந்தித்தின  மேயோதி
  வாழ்த்துந் தலமிது நாமே – தினம்
  தாழ்த்தும் விலையைக் கொய்தோமே        (பத்மினி)

8. எந்நேரமுஞ் ஜனக் கூட்டம் - மன
  நாட்டம் - நிறை வேற்றம் - எங்கள்
  ஏந்தல் கந்து}ரி கொண் டாட்டம்; - மிகு
  ஏதக்கூட வதைவிட்ட
  நீதக்கட வதைவிட்ட
  எந்தன் துயரதை நீங்கி – அருள்
  தந்திடுவார் கண்ணா நோக்கி  (பத்மினி)

 

9. ஏதுரைப்பே னிந்தக் காட்சி – அர
  சாட்சி - இறை மாட்சி - இங்கே
  எய்கினோர்க் கும்பவ மீட்சி  - இனும்
  ஈனக்கன லுளையுற்று
  மானக்கன நிலைக்கெட்ட
  எல்லவர்க்கும் அருள் கூடும் - தவ
  வல்லவரென் புகள் சூடும்             (பத்மினி)

10.அன்பன் காயற்பதி வாசன் - அவர்
  தாசன் - விசு வாசன் - புகல்
  அப்துல்லா வென்னுமுன்னேசன்  - எனை
  ஆளக்கட வதுவென்று
  நீளக்கதறியே நின்று
  ஆதாரமென் றவர் பதமே – மலர்ப்
  போதாரமே வந்தேன் சதமே            (பத்மினி)

Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser. Please click the button below to download & install it. It's free, fast and simple to use.


Google

You need real player software to play the media files. Please click the image to download the free player
© mediaislam.com